எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 33,848-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231-க்கு விற்பனையானது. இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.50.70-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, ஆபரண தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்தில்தான் ஆபரண தங்கம் சென்னையில் சவரன் ரூ. 31,000- ஐ தாண்டியது. ஜனவரி மாத துவக்கத்தில் தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்தது. பின்னர், அடுத்தடுத்து சரிவை சந்தித்ததால், அந்த மாத இறுதியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால், கடந்த மாதம் தங்கம் விலை நிலையாகவே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. கடந்த மாதம் 18-ம் தேதியில் தொடங்கி 6 நாட்களிலேயே சவரனுக்கு ரூ. 2,112 அதிகரித்தது. அதிகபட்ச உச்சமாக கடந்த மாதம் 24-ம் தேதி ஒரு சவரன் தங்கம் சவரனுக்கு ரூ. 752 அதிகரித்து ரூ. 33,328-க்கு விற்கப்பட்டது. பின்னர், கடந்த 25-ம் தேதி சவரனுக்கு ரூ. 592 சரிந்தது. இதுபோல் கடந்த மாதம் 29-ம் தேதி அதிகபட்சமாக சவரனுக்கு ரூ. 624 குறைந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே, சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வருகிறது. அதோடு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை 0.5 சதவீதம் குறைத்ததால் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்ததால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 73-க்கு மேல் சரிந்தது. இதனால், இந்தியாவில் தங்கத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.33,848-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


