எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 984 குறைந்து ஒரு சவரன் ரூ.30, 560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ. 3820-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் முதல் கால் சதவீதம் 0 - 0.25 என்ற வரம்புக்குள் இருக்குமாறு நேற்று முன்தினம் குறைத்தது. இதன் காரணமாக நேற்று தங்கத்தின் விலை குறைவை கண்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 984 குறைந்து ஒரு சவரன் ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 123 குறைந்து ரூ. 3820-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளில் சிறிய ஏற்றம் காணப்பட்ட நிலையில், தங்கம் விலை சரிவை கண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


