Idhayam Matrimony

முழு அடைப்பு சாத்தியமில்லை இம்ரான்கான் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர இந்திய பிரதமர் மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்றும் பாகிஸ்தானில் முழு அடைப்பு சாத்தியமில்லை என்றும் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மொத்தம் 887  பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர்.  சிந்து மாகாணத்தில் மட்டும் 344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் தான். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது:-

நிலைமை இத்தாலியைப் போல மோசமாக இல்லை. பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கு உத்தரவுக்கு சாத்தியமில்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போன்றோர் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம். ஆனால் அதே சமயம் என்னால் முடியாது. அவ்வாறு அறிவித்தால் எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடும். எங்களது நாட்டிலும் கொரோனாவின் மரணப்பிடியில் மக்கள் அல்லல்படுகிறார்கள். பாகிஸ்தான் உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. பாகிஸ்தானில் 25 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருவதால் பாகிஸ்தானில் முழு அடைப்பு சாத்தியமில்லை. நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுகின்றனர். முழு அடைப்பால் உணவுப்பஞ்சம் ஏற்படும். மக்களின் துன்பத்தை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா வைரஸை விட அதனால் எற்படும் பீதிதான் பிரச்சினை மிகவும் ஆபத்தானது. அனைவரும் பீதி அடைந்தால் அது சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.மேலும் சமூகத்தில் இருந்து விலகுதல், சுயமாக தனித்திருத்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்படுத்துதல் முறைகளை வரவேற்பதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து