எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுகான் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுகானில் கடந்த ஜனவரி மாதத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வுகான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும், வுகான் நகருக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சீனாவில் நோய்த் தொற்று ஏற்பட்ட வுகான் நகரில் 2 மாதங்களாக இருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது,. இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், பேருந்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுகின்றனர் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


