எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிரொலியாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ஒன்றுகூடுதலைத் தடுக்க பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுதாத நிலையைக் கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் தேர்வுகள் இல்லை என அறிவிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் அவ்வாறு அறிவிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால் தற்போது 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோன்று கடைசி நாளான நேற்று முன்தினம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுத முடியாமல் போனதால் அதைக் கருத்தில் கொண்டு வேறொரு நாளில் தனியாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நேற்று முன்தினம் (24.3.2020) மாலை 6 மணி முதல், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் 25.3.2020 அன்று(நேற்று) எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 24.3.2020 (கடைசித் தேர்வு) அன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் சில மாணவர்கள், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்குக் கொண்டு வந்ததைக் கனிவோடு பரிசீலித்து, 24.3.2020 அன்று பிளஸ் 2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாகத் தேர்வு நடத்தவும், இத்தேர்வுக்கான தேதியைப் பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன். மேலும், கொரோனா நோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன். தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு, 25.3.2020(நேற்று) மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026


