எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளி வைராலஜி ஆய்வு நிபுணர் கீதா ராம்ஜி தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானார், தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
கீதாராம்ஜி ஒருவாரத்துக்கு முன்னதாக லண்டனிலிருந்து திரும்பியுள்ளார், ஆனால் வெளியில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்காக குறிகுணங்கள் எதுவும் தென்படவில்லை. கீதா ராம்ஜி ஒரு வாக்சைன் ஸ்பெஷலிஸ்ட் என்பதோடு ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பவர். இவரது மறைவால் வைரஸ் ஆய்விலும் ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆய்விலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்ததோடு, இவரது மறைவில் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க இந்திய வம்சாவளி பார்மசிஸ்ட் பிரவின் ராம்ஜியை இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-ல் கீதாராம்ஜிக்கு லிஸ்பனில் தனித்துவமான பெண் விஞ்ஞானி விருது அளிக்கப்பட்டது. இவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஹெச்.ஐ.வி தடுப்பு ஆய்வுக்காக 2012-ல் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. அவர் 170-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பல அறிவியல் இதழ்களுக்கு இவர் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


