எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும் என அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் உதவித்தொகையாக அரிசி வாங்குகிற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றும், அந்த ரேஷன் கார்டிற்கு தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சீனி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்து உள்ளார்.
இந்த நிவாரண தொகையை ஸ்மார்ட் கார்டு மூலம் அனைவருக்கும் நாளை (வியாழக்கிழமை) முதல் ரொக்கமாக வழங்கப்படும். இதில் பெயர் உள்ளவர்கள் யாராவது சென்று வாங்கி கொள்ளலாம். அந்த அட்டை இல்லாத இனங்களில் அவர்களின் கார்டில் பெயர் உள்ள நபர்களின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு ஒரு முறை மட்டும் வருகின்ற கடவு சொல் அடிப்படையிலோ உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த தொகை ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. எந்த பகுதிக்கு எப்போது வழங்கப்படும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், கொரோனா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீடுகளுக்கே வரும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


