எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனையையும், அரசு அறிவித்துள்ள சிறப்பு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையையும் அரசு சுகாதார காப்பீடு திட்டத்தில் இலவசமாக பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசானது, ஏழை, எளியோருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா’ என்ற சுகாதார காப்பீடு திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.இந்த திட்டத்தில் சேர்ந்து, பலன் அடைந்து வருகிறவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனையையும், அரசு அறிவித்துள்ள சிறப்பு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையையும் இலவசமாக பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. இப்போது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக் கூடங்களில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அறிவித்துள்ள சிறப்பு தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சையும் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் கூறும் போது, முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தனியார் துறையை மிக முக்கிய பங்காளியாகவும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்குதாரராகவும் தீவிரமாக ஈடுபடுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


