எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் - 31- சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தொழில் திறமையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எஸ்.பி. ஜி. எனப்படும் சிறப்பு அதிரடிப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தொழில் திறமையை அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு ஏஜன்சிகளை கேட்டுக்கொண்டார்.
தீவிரவாதிகளால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு கவலை அளிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது என்றும் அதில் இந்தியாவும் ஒன்று என்றும் அவர் கூறினார்.
தீவிரவாத அச்சுறுத்தல்களில் இந்தியா விதிவிலக்கல்ல. கடந்த 30 ஆண்டு காலமாகவே இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
இப்போதுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு எல்லை எதுவும் இல்லை. இது பூகோள வரைமுறைகளை தாண்டி செல்கிறது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
பொது அறிவு, திறமை, ஆதாரம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதில் இப்போதுள்ள புதிய தலைமுறை தீவிரவாதிகள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். எனவே நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


