எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சண்டிகர்: கல்வியை முடித்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை மாநில அரசு செலுத்தும். அதேபோல, கடந்த ஆண்டு கல்வியை முடித்து கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் வேலை கிடைக்காத அல்லது தொழில் தொடங்க முடியாத நிலையில் உள்ளவர்களின் கல்வி கடனுக்கான 3 மாத வட்டியையும் அரசு செலுத்தும். இதன் மூலம் 36 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அரியானா மாநில மக்களுக்கு முதல்வர் மனோகர்லால் கட்டார் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா வைரஸால் மாநிலத்தின் நிதி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. பொருளாதார பாதிப்பு காரணமாக ஒருவர்கூட உணவு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு ரூ.636 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 3 மாதங்களாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.
இந்த ஆண்டு கல்வியை முடித்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை மாநில அரசு செலுத்தும். அதேபோல, கடந்த ஆண்டு கல்வியை முடித்து கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் வேலை கிடைக்காத அல்லது தொழில் தொடங்க முடியாத நிலையில் உள்ளவர்களின் கல்வி கடனுக்கான 3 மாத வட்டியையும் அரசு செலுத்தும். இதன் மூலம் 36 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மாநில அரசுக்கு ரூ.40 கோடி செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


