Idhayam Matrimony

சர்வதேச விமானங்களை இயக்குவது எப்போது? -மத்திய அமைச்சர் பதில்

சனிக்கிழமை, 23 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில், சர்வதேச விமானங்களை இயக்குவது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளது. இதற்காக 7 வகையான கட்டணங்களை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. விமானங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

விமான டிக்கெட்டுகள் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இணையதளம் வாயிலாக அளித்த பேட்டியின்போது, ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர், சர்வதேச பயணிகள் விமானங்களை குறிப்பிட்ட அளவிற்கு இயக்குவதற்கு முயற்சிப்போம் என்றார்.

மேலும், உள்நாட்டு விமான சேவையை தொடங்கியதற்கும், ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து