Idhayam Matrimony

வரும் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப வேண்டும் : ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

புதன்கிழமை, 3 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 8-ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மார்ச் 24-ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி  முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை  நடைபெறும் என அறிவித்தது.

இதற்கிடையே, கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றி தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி  நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முன்னதாக, ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்ததால், அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும்( தொடக்க, நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலை) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020-க்குள் வந்து இருக்க  வேண்டும்.

அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வு நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ளதால், தமிழகத்தில் வரும் 8-ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,  ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து