Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட கிலானி-மன்மோகன் விருப்பம்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

மொஹாலி,ஏப்.1 - இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தின் இடையே கிலானிக்கு மன்மோகன்சிங் விருந்து அளித்தார். அப்போது இருவரும் பேசியது குறித்து வெளியுறவு செயலர் நிருபமாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

இரு நாடுகள் இடையேயான உறவு மேம்படுவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அதன் மூலம் உறவு மேம்பட வேண்டும் என்று இருவரும் விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம் மும்பை தாக்குதலை இந்தியா மறந்து விட்டது என்று கூற முடியாது. வன்முறையற்ற சூழலில்தான் உறவு மேம்பட முடியும் என்பதை மன்மோகன்சிங் சுட்டிக் காட்டினார். அதை கிலானியும் ஒப்புக் கொண்டார். 

மும்பை தாக்குதல் குறித்து புது டெல்லியில் நடைபெற்ற உள்துறை செயலர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குற்றம் இழைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பழைய பகைகளை பின்னுக்கு தள்ளி இப்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்று மன்மோகன்சிங் கூறினார். அதற்கான மன உறுதியும் இரு நாடுகளுக்கும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் வர்த்தக செயலர்கள் அடுத்த மாதம் சந்திக்கவுள்ளனர். 

பாகிஸ்தான் வெளியுறவு செயலர் சல்மான் பஷீரை ஓரிரு மாதங்களில் நான் சந்திக்க உள்ளேன். அதன் பின்னர் வெளியுறவு செயலர்கள் கூட்டம் நடைபெறும். பாகிஸ்தானுக்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கிலானி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago