Idhayam Matrimony

கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கொரோனா சூழலுக்கு இடையில் கேரளாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்று அச்சத்தால் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மாநிலங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்த நிலையில், கேரளாவில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. 

இந்த ஆண்டு கேரளாவில் 4,22,450 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

41,906 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்ணான A+ -கிரேடைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 4,500 மாணவர்கள் இம்முறை A+ கிரேடைப் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,736 மாணவர்கள் A+ கிரேடைப் பெற்றுள்ளனர். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்று வந்த 10-ம் வகுப்புத் தேர்வுகள் கோவிட் பரவலால் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மே 26 முதல் 28-ம் தேதி வரை மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்பட்டன. கேரளாவில் 9 புள்ளி கிரேடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதில் அதிகபட்ச கிரேடு மதிப்பெண் 9, குறைந்தபட்சம் 1 ஆகும். அவை முறையே A+, A, B+, B, C+, C, D+, D, E என்பன ஆகும். இதில் D, E கிரேடு பெறுபவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டியது அவசியம். 

இந்தியாவிலேயே கேரளாவில் மட்டும்தான் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து