Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அதிபராக உள்ள புடி 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் பங்கு பெற வகை செய்யும் அரசியலைமைப்பு திருத்தத்திற்கு அந்நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 77 சதவிகித வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு தெரிவித்தனர். 

இதனால் புடின் அடுத்த இரண்டு அதிபர் தேர்தல்களிலும் போட்டியிடலாம்.  அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷ்யாவின் அதிபராக புடின் செயல்படுவார்.

இந்நிலையில், தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தலில் புடின் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் மோடி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தேர்தலில் புடின் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ரஷ்ய அதிபர் புடின் நன்றி தெரிவித்தார். மேலும், இரு நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்  இரு நாட்டு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து