முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது.  பிளாஸ்மா என்பது ரத்தத்தில் உள்ள ஒரு திரவம். ரத்தத்தில் 45 சதவீதம் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டையணுக்கள் உள்ளன. எஞ்சிய 55 சதவீதம்தான் பிளாஸ்மா. ஒரு வைரஸ் மனித உடலில் வந்தால் அதை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு திறன்) பிளாஸ்மாவில்தான் தோன்றுகின்றன. இதன் காரணமாகத்தான் பிளாஸ்மா மூலம் நோயாளிகளை குணப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

ஒருவரது உடலில் இருந்து ரத்தம் எடுப்பதுபோல் பிளாஸ்மா எடுப்பதற்கென தனி எந்திரங்கள் இருக்கின்றன. பிளாஸ்மா தானம் அளிக்கப்படும் நபருக்கு, ரத்ததானம் வழங்க வரும் நபர்களுக்கு செய்யப்படுவது போன்று பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அந்த பரிசோதனைக்கு பின்னரே அவரது உடலில் இருந்து முதலில் ரத்தம் எடுக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது.

டெல்லி, கேரளா, குஜராத், பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கி உள்ளன. இதன்மூலம் பல நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் பெறப்படும் என்றும் பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14-வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம்.

சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது.  தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் பிளாஸ்மா தானம் அளிக்க முன் வரும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டிலேயே 2-வது பிளாஸ்மா வங்கி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவ உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு, கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத ((No Drug of Choic) சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை அடிப்படையில் நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து