Idhayam Matrimony

பார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது? -மத்திய அமைச்சர் ஜோஷி பதில்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரைத் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி முடிந்தவுடன் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

மார்ச்-2-ம் தேதி 2-ம் கட்ட அமர்வு தொடங்கியது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே அதாவது மார்ச் 23-ம் தேதியே நாடாளுமன்றக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

முதல் கட்ட அமர்வில் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் 7 அமர்வுகள் நடந்தன. 2-வது கூட்டத்தில் 14 அமர்வுகள் நடந்தன. மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 13 மசோதாக்களும் நிறைவேறின. கூட்டம் ஒத்திவைக்கப்படும் முன் அனைத்து முக்கிய நிதி மசோதாக்களும் நிறைவேறின.  பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு 90 சதவீதமும், மாநிலங்களவை செயல்பாடு 74 சதவீதமும் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் குறையாத நிலையில் மழைக்காலக் கூட்டத் தொடர் எப்போது நடத்தப்படும் அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த அவர், 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். செப்டம்பர் வரை நமக்கு  காலம் இருக்கிறது. பலமுறை ஆகஸ்ட் இறுதியோடு கூட்டத்தொடர் முடிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழலில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இது மேலும் எப்படி விரிவடைகிறது என்று பார்க்கலாம் என்று பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து