எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாரீஸ் : பிரான்சின் மிகவும் உயரான மலைப்பகுதியில் பனிப்பாறைகள் உருகிய நிலையில், 1966-ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் சாமோனிக்சில் உள்ள ரிசாட்டில் இருந்து சுமார் 1350 மீட்டர் உயரத்தில் லா காபேன் டு கெர்ரோ எனற் ரெஸ்டாரன்ட்-ஐ நடத்தி வருபவர் திமோத்தீ மோட்டின் இவர் அந்த பகுதியில் நடந்து செல்லும் போது பனிப்பாறை உருகிய நிலையில், பாறைக்கு இடையில் இருந்து இந்திய செய்தித்தாள்களை கண்டுபிடித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு, எக்னாமிக் டைம்ஸ் போன்ற இந்தியாவின் செய்தித்தாள்களை அப்பகுதியில் இருந்து எடுத்துள்ளார். மேலும், ஹெரால்டு செய்தித்தாளில் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி 1966-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் அந்த தலைப்பு உள்ளது.
இதனால் 1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 177 பேரும் உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இந்த பத்திரிகைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்தித்தாள்களை கண்டெடுத்த மோட்டின் கூறுகையில் நாங்கள் அந்த பத்திரிகைகளை உலர்த்தி கொண்டிருக்கிறோம். ஆனால், அவைகள் நல்ல நிலையில்தான் உள்ளன. நீங்கள் அதில் உள்ள எழுத்துக்களை வாசிக்கலாம்.
நான் எனது நண்பர்களுடன் ஒவ்வொரு முறையில் அந்த பனிப்பாறையில் நடந்து செல்லும் போது, நொறுங்கிய விமானத்தின் ஒவ்வொரு பொருட்களையும் கண்டெடுத்துள்ளோம் என்றார். அதே இடத்தில் 1950-ம் ஆண்டு மலபார் பிரின்சஸ் என்ற விமானமும் விபத்துக்குள்ளாகி யிருந்தது குறி்ப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


