எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, ஏப். 1 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடந்த 2 - வது அரை இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு அணியின் கூட்டு முயற்சியே காரணம் என்றும், டெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு வழி காட்டியாக திகழ்கிறார் என்று கேப்டன் தோனி தெரிவித்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட அரை இறுதிப் போட்டியில் இந்தியா 29 ரன் வித்தியாச த்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்னை எடுத்தது. டெண்டுல்கர் 89 ரன்னும், சேவாக் 25 பந்தில் 39 ரன்னும், ரெய்னா 36 ரன்னும் எடுத்தனர். பாக். அணி தரப்பில் வகாப் ரியாஸ் 5 விக்கெட்டும், அஜ்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 49.5 ஓவரில் 231 ரன்னில் ஆல் அவு ட் ஆனது. ஜாஹிர்கான், முனாப் படேல், ஹர்பஜன் சிங் மற்றும் யுவ ராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் தோனி நிருபர்களிடம் கூறியதாவது - நெருக்கடியான நேரத்தில் சிறப் பாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
260 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் தான். இருந்த போ திலும், மிகவும் கவனமாக விளையாடினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.
பாகிஸ்தான் வீரர்கள் சுழற் பந்து வீச்சில் சிறப்பாக ஆடுவார்கள் என் று கருதியும், ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கு ம் என்று கருதி தான் அஸ்வினை நீக்கி விட்டு 3 -வது வேகப் பந்து வீர ரை சேர்த்தேன்.
ஆடுகளம் குறித்து நான் கணித்தது தவறானது. சுழற் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து திரும்பியது. ஆனாலும் எங்களது வேகப் பந்து வீச் சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். ஜாஹிர்கான், முனா ப் படேல், நெக்ரா நன்றாக வீசினார்கள்.
இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. டெண்டுல்கரின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர்களு க்கு அவர் உதவியாக உள்ளார்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் சிறப்பாக விளையாடுவார். அணியி ல் உள்ள வீரர்களுக்கு அவர் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார். ஆஷிஸ் நெக்ரா குறித்து விவாதிக்கப்பட்டது.
இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி. ஆனால் விமர்சகர்களின் வாயை அடைக்கும் விதத்தில் அவர் சிறப்பாக பந்து வீசியதை அனைவரும் பார்த்து இருப்பார்கள். இன்னும் சிறிது காலம் இது குறித்து பேச மாட்டார்கள்.
கடைசி கட்டத்தில் ரெய்னாவின் 36 ரன் மிகவும் சிறப்பானது. அணி 50 ஓவரை பூர்த்தி செய்தது முக்கியமானது. இதற்கு ரெய்னா தான் கார ணம். பேட்டிங் பவர் பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடினோ ம்.
அணியில் தனிப்பட்டவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்காகவே ஆடுகிறார்கள். வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம்.
இறுதிப் போட்டியில் இலங்கை அணியை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பாக். அணிக்கு எதிராக அரை இறுதியில் பெற்ற வெ ற்றி எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இவ்வாறு தோனி கூறி னார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.



