முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேரியா மருந்து குறித்த வீடியோவை நீக்கிய சமூக ஊடக நிறுவனங்கள் : மேலும் 14 டுவிட்டுகளை பகிர்ந்த டிரம்ப்

புதன்கிழமை, 29 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து பதிவிட்ட டிரம்பின் வீடியோவை தவறான தகவல் என டுவிட்டர் நீக்கிய பின்னர், தொடர்ந்து 14 டுவிட்டுகளை பகிர்ந்துள்ளார் அதிபர் டிரம்ப். இதனால் வெள்ளை மாளிகைக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. 

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது மலேரியா காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இந்த மருந்து இரண்டாம் உலக போரின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு அமெரிக்க அதிபர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். தான் உடகண்டதாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறி உள்ளார்.   

டிரம்ப் தனது டுவிட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், அதில் ஒரு மருத்துவர்கள் குழு  கொரோனா வைரஸ் தொற்றுநோய் சிகிச்சைக்கான மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை ஊக்குவித்தனர் என பதிவிட்டிருந்தார். இதனை டுவிட்டர் நீக்கியது.

பேஸ்புக் நிறுவனமும் திங்கள்கிழமை மாலை அந்த வீடியோவை நீக்கியது, அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த காட்சிகள் கொரோனாவுக்கான சிகிச்சைகள் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளன என்று கூறினார்.  இந்த வீடியோ அகற்றப்படுவதற்கு முன்பு சுமார் 1.4 கோடி மக்கள் பேஸ்புக்கில் பார்த்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக மலேரியா மருந்தை பயன்படுத்துவது பாதுகாப்பானது என  அதிபர் டிரம்ப் செவ்வாயன்று டுவிட்டரில் தொடர் டுவீட்களை வெளியிட்டுள்ளார். 

சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர், மலேரிய மருந்தின் பயன்பாட்டை தீங்கு விளைவிக்கும் தவறான தகவலாக ஊக்குவிக்கும் அவரது வீடியோக்களை நீக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் தொடர்ந்து 14 டுவிட்டுகளை வெளியிட்டு உள்ளார். 

வெள்ளை மாளிகையின் செய்தியாளர்கள் கூட்டத்தில் வீடியோவை விளம்பரப்படுத்துவதற்கான தனது முடிவை ஆதரித்த அவர், மலேரிய மருந்தை நம்பிய மருத்துவர்கள் மிகவும் மரியாதைக்குரிய மருத்துவர்கள் என்று நான் நினைக்கிறேன் என கூறினார். 

இந்தவிவகாரம்  வெள்ளை மாளிகைக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இடையிலான மோதலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து