எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் வரும் மர்ம விதைகள் குறித்து விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் உயிரை இழந்துள்ளனர். இன்னும் இந்த நோயின் தாக்கம் ஒரு சில நாடுகளில் தீவிரமாகி தான் வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் இருந்து தான் அனைத்து நாடுகளுக்கு பரவியது. ஆனால், சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க பொதுமக்களுக்கு அமெரிக்காவின் விவசாயத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என்றும் அந்த விதைகள் மற்றும் அதன் பேக்கேஜ்களை பத்திரமாக வைத்திருந்து உள்ளூரில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, சீனா உயிரி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கும் மர்மமான விதைகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் கனடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது குறித்து சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் கூறும் போது லேபிள்கள் போலியானவை என்றும் அவை பற்றிய தகவல்களில் தவறுகள் இருப்பதாகவும் கூறியுள்ளது.
செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது, இந்த போலி பார்சலை சீனாவுக்கு திருப்பித் அனுப்புமாறு சீனா, மெரிக்காவின் அஞ்சல் சேவையை கேட்டுள்ளது, அப்போது தான் அதுகுறித்து சீனா விசாரிக்க முடியும் எனவும், விதைகளை கையாள்வது குறித்த யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் விதிகளை சீன தபால் சேவை கண்டிப்பாக கடைபிடித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


