எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அயோத்தி : அயோத்தியில் பூமி பூஜைக்கான சடங்குகள் இன்று தொடங்கும் நிலையில் எழில்மிகு அலங்கார தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டு களைகட்டியுள்ளது.
இன்று 3-ம் தேதி முதல் அயோத்தியில் பூமிபூஜைக்கான சடங்குகள் தொடங்குகின்றன. 5-ம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பூமி பூஜையின் பிரதான நிகழ்வும் 5-ம் தேதியன்று நடைபெறுகிறது.
இதற்காக அயோத்தி பெரிய அளவில் தயாராகி வருகிறது. இதில் 200 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார், இது தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் வினய் காத்தியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
பூமி பூஜை நிகழ்ச்சிக்காக அயோத்தி முழுதையும் அலங்கரிக்கும் பொறுப்பும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று அயோத்தியின் பல இடங்களில் வண்ண விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டன. சாலைகள் அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்போது அயோத்தியின் முழு அமைப்புமே மாறிவிட்டது, என்றார். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளோம். 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


