எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ரோம் : கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 நோய்க்கு எதிரான வாக்சின் தயாரிப்பில் மிகப்பெரிய சவால் அளிப்பது வைரஸ் இரட்டிப்பாகும் போது வெவ்வேறு விதமாக கொரோனா வைரஸ் மாற்றமடைகிறது என்பதே, ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இல்லை, ஒன்றுக்கொன்று பெரிய மாற்றங்களெல்லாம் இல்லை என்று நல்ல செய்தி’ வெளியாகியுள்ளது.
சுமார் 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் ஜெனோம்களை பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொண்ட இத்தாலி போலோக்னா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் உலகம் முழுதும் பரவிய கொரோனா வைரஸ் மரபணு வரிசைத்தொடர்களை ஆய்வுக்குட்படுத்தியதில் இந்த நல்ல செய்தி தெரியவந்துள்ளது.
சாம்பிள் ஒன்றுக்கு 7 உரு-இயல் மாற்றங்கள் கொரோனா வைரஸில் நிகழ்ந்தாலும் ஒன்றுக்கொன்று பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“சார்ஸ்-கோவிட் கொரோனா வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடியதாக மாறியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவெனில் கொரோனா வைரஸ் மிகவும் குறைவான பரிணாம மாற்றங்கள் கொண்டது என்பதே.
இதன் நம்பிக்கைக்குரிய அறிகுறி என்னவெனில், கொரோனாவுக்கு எதிராக நாம் வழங்கி வரும் சிகிச்சைகள், வளர்ந்து வரும் புதிய சிகிச்சைகள், நோய் தடுப்பு மருந்துகள் ஆகியவை நிச்சயம் திறம்பட வேலை செய்யும் என்பதே என்று இந்த ஆய்வு திட்டவட்டமாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாவல் கொரோனா வைரஸின் 6 வகையான மாறுமைகள் இருக்கின்றன. இதில் அசலானது வூஹானில் டிசம்பர் 2019-ல் உருவான ‘எல்’ என்ற கரோனா மாதிரி. இதன் உருமாற்றமான ‘எஸ்’ வைரஸ் மாதிரி 2020 தொடக்கத்தில் தோன்றியது. ஜனவரி மத்தியிலிருந்து ‘வி’, ‘ஜி’ ஆகிய மாறிய கரோனா வடிவங்கள் நமக்குத் தெரியவந்துள்ளது.
இன்றைய தேதியில் ‘ஜி’ என்ற கரோனா மாதிரிதான் பரவலாக தொற்றி வருகிறது, இதுதான் ஜிஆர் மற்ரும் ஜிஎச் என்ற துணைவகைகளாக மாற்றமடைந்துள்ளது.
ஜி யின் மாறிய வகையினமான ஜிஆர், ஜிஎச் ஆகிய கொரோனா துணை வகை வைரஸ்தான் இதுவரை பரவலாகியுள்ளது, அதாவஹ்டு இந்த ஆய்வில் ஆய்வு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசைத் தொடர்களில் 74% ஜி-வகை, துணை வகைகள்தான்.
இவை 4 உருமாற்றங்களை தெரிவிக்கின்றன், இதில் 2 வகைகள் ஆர்.என்.ஏ. பாலிமெரேஸ் புரோட்டீன் வரிசைத் தொடரையும் வைரஸின் ஸ்பைக் புரோட்டீனையும் மாற்றக்கூடியது. இந்தத் தன்மைதான் வைரஸ் பரவலை தூண்டி விட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


