Idhayam Matrimony

லெபனான் வெடி விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் 6 ஆண்டாக வைக்கப்பட்டு இருந்த 2,750 டன்கள் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் 73 பேர் பலியாகினர்.

ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.  இந்நிலையில், லெபனான் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெய்ரூட் நகரத்தில் நடந்த மிகப்பெரிய வெடி விபத்து அதிக அளவில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. 

வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து