எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழக கவர்னர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 38 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து கவர்னர் பன்வாரிலாலுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்ததில் நலமுடன் உள்ளதாகவும் 7 நாள் தனிமைப்படுத்தப்படவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று கவர்னர் பன்வாரிலால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கவர்னர் பன்வாரிலாலுக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கவர்னரை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


