எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மாநிலம் முழுவதும் பின்பற்றலாம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:–
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.பரிசோதனைகள் அதிகரித்தல், 2.காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், 3.வீடுகள்தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், 4.வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல், 5.பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடிசைப் பகுதிகளுக்கு தொண்டு நிறுவனங்களைக் கொண்டு சிறப்பு திட்டங்கள்,
6.சென்னை சமூக களப்பணித் திட்டத்தின் மூலம் வைரஸ் தொற்று குறித்த ஐ.இ.சி. மற்றும் விழிப்புணர்வு, 7.வார்டுகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட நுண்திட்டம், 8. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வாகனங்களில் ஸ்கிரீனிங் மையங்களுக்கு அழைத்து செல்ல வாகன வசதி, 9.கட்டுப்பாட்டு அறை, 10.ஆற்றுப்படுத்துதல் அறை, 11.தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை செய்தல், 12.கோவிட் பாதுகாப்பு மையங்களில் வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை உட்பட தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இதுபோன்ற வழிமுறைகள் மற்றும் சிறப்பு திட்டங்களை பிற மாவட்டங்களிலும் பின்பற்றி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் 18 ஆயிரத்து 614 படுக்கை வசதி கொண்ட கோவிட் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையைச் சார்ந்த 2,311 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 289 வாகனங்கள் உள்ளன.
சென்னை சமூக களப்பணித் திட்டம் என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,979 குடிசைப்பகுதிகளில் 92 தொண்டு நிறுவனங்களின் மூலம் 4,500 பணியாளர்களைக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேலும் உத்வேகத்துடன் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக சென்னையை மாற்றிடும் வகையில் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் குமார் பன்சால், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி,
இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவாத், துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் (வருவாய்) ஜெ.மேகநாத ரெட்டி, வட்டார துணை ஆணையாளர்கள் பி.ஆகாஷ், பி.என்.ஸ்ரீதர், டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல சிறப்பு அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
டெல்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: 5 பேர் பலி
12 Jul 2025புதுடில்லி, டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு
12 Jul 2025நியூயார்க், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி பணியடத்துக்கு 353 பேர் போட்டி
12 Jul 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
லாா்ட்ஸ் டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம்
12 Jul 2025லண்டன் : லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பும்ரா 5 விக்கெட்...
-
குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
12 Jul 2025வதோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.