Idhayam Matrimony

46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை கோலபா பகுதியில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தினை மும்பை சந்தித்து வருகிறது.  குறிப்பாக தெற்கு மும்பையின் கோலபா பகுதியில்  ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  நேற்று முன்தினம் மழை பதிவானது.

மழை மற்றும் மணிக்கு 107 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாநில முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கேட் வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து தொடங்கும் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கோலபா பகுதியில் ஒரே நாளில் 333.8 மி.மீட்டர் மழை பதிவானது.  இது 1974-ம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் பெய்த மிக அதிக அளவு மழை பொழிவாகும்.  மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 64 சதவீதம், முதல் 5 நாட்களிலேயே  பெய்துள்ளது.  கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து