Idhayam Matrimony

கொரோனா காலத்திலும் தொய்வில்லாமல் மருத்துவ சேவைகள் நடைபெறுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வரின் உத்தரவின் பேரில் கொரோனா காலத்திலும் தொய்வில்லாமல் இதர சிறப்பு மருத்துவ சேவைகள் நடைபெறுவதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக அரசு முதல்வரின் தலைமையில், உலகளவில் பெருந்தொற்று பரவிய காலத்திலும் கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. 

அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று அல்லாத நோயாளிகளுக்கும் எவ்வித தங்கு தடையின்றி அவசரகால மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த வகையில் மார்ச் 2020 முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 கோடியே 9 லட்சத்து 2,183 நபர்கள் புறநோயாளிகளாகவும் 27 லட்சத்து 30 ஆயிரத்து 864 நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 571 பிரசவங்களும் 68 ஆயிரத்து 479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் 126 ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் (சீமாங்) ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 206 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன.

மேலும், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்து 374 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். 

கொரோனா தொற்றினால் இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் தனியார் மருத்துவமனைகளின் பளுவையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் சேவைகள் வழங்கப்பட்டதால் புற நேயாளிகள் மற்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் உயர்ந்துள்ளன. 

தமிழகஅரசு முதல்வரின் தலைமையில் மக்கள் நலன் காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து