எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி ஜூலை.06 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தை தமிழக நிதியமைச்சரும், கழக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவில் போடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
போடிநாயக்கனுனூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தை ஜூன் 01-ம் தேதி துவங்கி ஜூன்-05 வரை 5 நாள்கள் நடைபெற்றது. இதில் முதல் நாளான ஜூன் 01-ம் தேதி அனிக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம், ஆச்சார்யவரணம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், தனபுஜை, கணபதி ஹோமம், புர்ைணாஹூதி, தீபாராதனை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரசேஷாக்னஹோமம் போன்ற புஜைகளும்,
இரண்டாம் நாளான ஜூன் 02-ம் தேதியன்று நவக்ரஹஹோமம், சாந்தி ஹோமம், மிருத்ஸங்பிரஹணம், அங்குரார்ப்பணம், ரசஷாந்தனம், மண்டபாராதனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், அக்னிகார்யம், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாராதணை போன்ற நிகழ்ச்சிகளும்,
மூன்றாம் நாளான ஜூன் 03-ம் தேதியன்று விசேஷசந்தி, விக்னேஸ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், இரண்டாம் காலயாகபுஜைகள், அஷ்டாதசக்ரியாவளி, திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை, விசேஷசந்தி, விக்னேஷ்வர புஜை, மூன்றாம் காலயாகபுஜைகள், பரிவார அஷ்டபந்தனம், தீபாராதணை போன்ற நிகழ்ச்சிகளும்,
நான்காம் நாளான ஜூன் 04-ம் தேதியன்று விசேஷசந்தி, விக்னேஸ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், நான்காம் காலயாகபுஜைகள், விமான கலசம் வைத்தல், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை, விசேஷசந்தி, விக்னேஷ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், ஜந்தாம் காலயாகபுஜைகள், லட்சுமிபுஜை, யந்த்ர ஸ்தாபனம், மூலவர் அஷ்டாந்தனம், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை போன்ற நிகழ்ச்சிகளும்,
ஜந்தாம் நாளான ஜூன் 05-ம் தேதியன்று ஜந்தாம் காலயாகபுஜைகள், பிம்பசுத்தி, ரசஷாபந்தனம், ஸ்பர்சாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் புஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேல் சுமந்து வந்த தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்;செல்வம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கோபுரத்தில் நின்றபடி பச்சை கொடி அசைத்து கும்பாபிஷேகத்தை துவக்கி வைத்தார். அமைச்சர் கொடி அசைத்தவுடன் விமான, ராஜகோபுரத்தில் இருந்த கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து சபரிவாரஸ்ரீவள்ளி தெய்வானைக்கும், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தின் போது வானத்தில் கருடபகவான் தரிசனம் கிடைத்தை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள்.
மேலும் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து நடைபெற்ற புஜையில் தீபாராதணை நடைபெற்றது, அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அரோகரா, அரோகரா என்ற சரணகோஷமிட்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர்.
இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவரும், போடி நகர்மன்ற தலைவருமான பழனிராஜ், கெளரவத்தலைவர் முத்துவீர சுருளியம்மாள், கோவில் தக்கார் சுதா, திருப்பணிக்குழுவினர்கள் - பாலமுருகன், தியாகராஜன், வடமலை ராஜையபாண்டியன், வேல்ராஜ், கண்ணன் (எ) கிருஷ்ணராஜ், பாலசுப்பிரமணியன், சம்பத், ராஜ்மோகன், சுந்தர்ராஜ், கதிரேசன், கருப்பையா, பெரியமனோகரன், ராமசுப்பிரமணியம் (எ) ரமேஷ், ராஜகோபால், சுப்பிரமணி, மெய்யப்பன், பெருமாள், சந்திரசேகர், ராஜா, மோகன், மாரியப்பன், ராம், சுருளிவேல், ராமநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
போடிநாயக்கனுனூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு போடி ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கான அன்னதானத்தினை பெரியகுளம் கைலாசப்பட்டி அருள்மிகு கைலாசநாதர்சுவாமி திருக்கோவில் ஆலோசகர் ஓ.பி.ரவீந்திரநாத், போடிநாயக்கனுனூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு பரமசிவன் திருக்கோவில் ஆலோசகர் ஜெயபிரதீப் ஆகியோர் வழங்கினார்கள்.
யாகசாலை புஜைகளை பழனி திருக்கோவில் வேதசிவாகம பாடசாலை முதல்வரும், ஆகம வல்லுனர் குழு தலைவருமான பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது
21 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா தகவல்
21 Jan 2026டாவோஸ், இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா வென் டர் லியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி.தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு
21 Jan 2026நியூயார்க், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


