எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை பெற்ற அதிமுகவே 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட அயனாவரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனுக்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை நேரில் சென்று ஆய்வு நடத்தி வருவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார்.
ஆனால் காணொலி காட்சி மூலம் திமுக பொதுக்குழு நடத்தி சாதனை என பெருமை பேசுகிறார். இதே நடவடிக்கையை அரசு செய்தால் திமுக விமர்சனம் செய்கிறது? மாணவர்களுக்கு அரியர் தேர்விலிருந்து விலக்கு அளித்தோம்.
ஆனால் மாணவர்களுக்கு குழப்பும் ஏற்படுத்தும் செயல் என மாறி மாறி பேசுகின்றனர். மாணவர்கள் நலன் கருதி அரியர் மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவித்தார் முதலமைச்சர். ஆனால் அதையும் திமுக விமர்சிக்கிறது.
இந்தியாவிலேயே அதிகமாக காணொளி காட்சி மூலம் திட்டங்களை திறந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். மக்களை திசை திருப்பும் வேலைகளை திமுக செய்கிறது.
அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் அதிக சிகிச்சை கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நம்பிக்கையை பெற்ற முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
2021ம் ஆண்டில் அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். டீக்கடை மளிகைகடை, மார்கெட்களில் அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என மக்கள் பேசிகொள்கிறார்கள். சட்டசபை தேர்தல் என்பது 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பரிட்சை. அதற்காக நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம்.
மக்கள் மனதை, தேவையை படிக்கின்றோம். சேவை செய்கின்றோம். எனவே படித்த மாணவர்களுக்கு தேர்வு பயம் கிடையாது. எங்களுக்கு அம்மா நன்றாக சொல்லிக் கொடுத்துள்ளார். கிஷான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்ப்பட்டு வருகின்றனர்.
எட்டு மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என ஸ்டாலின் பேசிய வசனம் மக்களிடம் வெற்றி பெறாது. அதிமுக ஹட்ரிக் சாதனை படைக்கும். திமுகவினர் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
அதிமுக தான் மக்களிடையே நம்பிக்கையை பெற்றுள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஐ.ஏ.எஸ். ஆதிகாரி அரவிந்தன் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் எம்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


