Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை தொடர்ந்து 2-ம் இடத்தில் நீடிக்கும் இந்தியா, புதிய பாதிப்புகள் மற்றும் குணமடைவோர் எண்ணிக்கையில் தினமும் கணிசமான அளவை பெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,74,703 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,039 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,542 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 74,893 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதன்மூலம் இதுவரை 50,16,521 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் 9,62,640 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நேற்று முன்தினம் 7,09,394 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 7,19,67,230 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து