எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,000-க்கு கீழ் சென்றது.
தங்கம் விலை கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 7-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,416-க்கும், பவுன் ரூ.43,328-க்கும் விற்கப்பட்டது.
இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்து வந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.
தங்கம் விலை கடந்த 19-ம் தேதி ஒரு சவரன் 39,664-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்தது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 1,552 அளவுக்கு குறைந்தது. சவரன் 38 ஆயிரத்துக்குள் வந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 25 அதிகரித்து ஒரு கிராம் 4,789-க்கும், சவரனுக்கு 200 அதிகரித்து ஒரு சவரன் 38,312-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு 9 குறைந்து ஒரு கிராம் 4,780-க்கும், சவரனுக்கு 72 குறைந்து ஒரு சவரன் 38,240-க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது.
நேற்று காலை நிலவரப்படி; சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.38,000-க்கு கீழ் சென்றது. கிராமிற்கு ரூ. 30 குறைந்து ரூ.4,740-க்கும், ஒரு சவரன் ரூ.37,920 விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.61.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


