எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24-ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து 4.0 எனப்படும் 4-வது கட்ட ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
4-வது கட்ட ஊரடங்கு காலம் நிறைவடைய உள்ள நிலையில் நேற்று 5-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, ஐந்தாம் கட்ட தளர்வில் அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள், மல்டிப்ளக்ஸ் அரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அக்டோபர் 15-ம் தேதிக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும். நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களும் திறக்க அனுமதி அளிக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும். அக்டோபர் 5-ம் தேதி முதல் ஓட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை பொது முடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


