எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மசாஜ் மையம் மற்றும் மதுபானக்கூட வசதிகளுடன் மீண்டும் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகிற ஜனவரி மாதம் இயக்கப்படுகிறது.
ஆடம்பர சுற்றுலா பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்த ரயில் தற்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இந்த ரயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது.
ரயிலில், தங்கும் அறைகள் புதுப்பித்து அலங்கரிக்கப்பட்டு உள்ளன. குளியல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. பயணிகளின் பொழுதுபோக்குக்காக ஸ்மார்ட் டி.வி. வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதில் ‘நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார்’ போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, தீ எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் மன மகிழ்வுக்காக மசாஜ் சென்டர், உள்நாட்டு மதுபானங்கள் அடங்கிய மதுபானக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
நவீன எந்திரங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடமும் உள்ளது. இயற்கை காட்சிகளை ரசித்தபடியே உணவு உண்ணும் வகையில் ‘ருசி’ மற்றும் ‘நளபாகம்’ என்ற பெயரில் 2 உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இத்தனை அம்சங்களும் கொண்ட இந்த சொகுசு ரயிலை கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
இதன்படி பிரைடு ஆப் கர்நாடகா என்ற பெயரில் 7 நாள் பயணமாக இயங்கும் ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்கா, சிக்மகளூர், ஹம்பி, பட்டடக்கல் மற்றும் கோவாவுக்கு செல்கிறது. ‘
ஜுவல் ஆப் சவுத்’ என்ற பெயரில் 7 நாள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு ஹம்பி, மாமல்லபுரம், தஞ்சாவூர், செட்டிநாடு, குமரகம் மற்றும் கொச்சிக்கு செல்கிறது. ‘
கிளிம்ப்சஸ் ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 4 நாள் பயணமாக இயங்கும் ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்காவுக்கும், ஹம்பிக்கும் செல்கிறது. இந்த ரயில் பயணத்துக்கு கட்டணச்சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் செலுத்தும் கட்டணத்தில் உணவு, ஏ.சி. பஸ் பயன்பாடு, சுற்றுலாத்தல நுழைவுக்கட்டணங்கள், மதுபானக்கூடத்தை பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டணம் மற்றும் சலுகை பற்றிய விவரங்களை பயணிகள் அறிந்து கொள்ள 8287931970 மற்றும் 8287931974 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையோ, அல்லது 8287931977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று, ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுற்றுலா முதுநிலை செயல் அதிகாரி மாலதி ரத்தினம் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


