எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனாவை தடுக்க புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மூக்கு வழியாக தெளிக்கப்படும் தடுப்பு மருந்து பரிசோதனை விரைவில் நடைபெற உள்ளது.
கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பூசி பரிசோதனைகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தடுப்பூசிகளின் பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் ஆகியவை மூக்கு வழியே தெளிக்கும் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட உள்ளன என்று தெரிவித்தார்.
தேவையான நடைமுறை ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த பரிசோதனை தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் பல்கலை கழகத்தின் மருத்துவ கல்லூரியோடு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி அந்த நிறுவனம் சார்ஸ் கோ விட் தடுப்பு மருந்து பரிசோதனை, தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளும் என்றும், சீரம் இந்தியா நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் விரைவில் இறுதி கட்ட பரிசோதனையில் ஈடுபட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பரிசோதனையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இப்போது உடலில் செலுத்தும் ஊசி வகையிலான தடுப்பூசி பரிசோதனைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மூக்கு வழியே தெளிக்கும் தடுப்பு மருந்து உருவாக்கும் பணியும் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


