Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கியது

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியது. 

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன.  கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள்தோறும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன் வந்துள்ளது.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியது.  திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் நேற்று காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டது.  அலிபெரியில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து