Idhayam Matrimony

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் கே.பாலகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கே. பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் அவர் உடல்நலம் பெற வேண்டி வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.  தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கே.பாலகிருஷ்ணன் தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று (அக். 26) வீடு திரும்பினார். 

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் இன்று(நேற்று) குணமடைந்து இல்லம் திரும்பி விட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சையளித்த டீன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து