எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை நடிகர் சூரிக்கு தரவேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கிக்கு பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் 'வீர தீர சூரன்' படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா மீதான ரூ.2.70 கோடி மதிப்பிலான நிலமோசடி புகாரை சி.பி.ஐ விசாரிக்க கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடைய முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதி, அவர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின்னர் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன்ஜாமீன் மனு தொடர்பாக நவம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது, சூரி தரப்பிடம் நீதிபதி, ‘இந்த வழக்கில் பணம் திருப்பிக் கொடுத்தால் போதுமா ? அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டுமா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சூரி தரப்பில் , ‘பணம் திரும்பக் கிடைத்தால் போதும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவ 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


