எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத். ஜூலை. 20 - ஐநது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டி நடத்தாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இரு நாடுகளின் நல்லெண்ண நடவடிக்கைகளின் காரணமாக வருகிற டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகளையும் இரண்டு 20 ஒவர்போட்டிகளையும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு அழைப்பு அனுப்பியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடைஏய 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டியை அறிவித்ததற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த இரு நாட்டு கிரிக்கெட் உறவு குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் உறவு தொடங்கியுள்ளது ஒரு நல்லெண்ண நடவடிக்கை என்றும் அதை தான் வரவேற்பதாகவும் அந்த கடிதத்தில் சர்தாரி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே காணப்படும் சாதகமான சூழ்நிலைக்கு இது மேலும் மெருகூட்டுவதாகவும் உள்ளது என்றும் சர்தாரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
தான் சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது இரு நாடுகளின் கிரிக்கெட் உறவை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக தான் தங்களுடன் விவாதித்ததை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் சர்தாரி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்படுவது தவிர்க்க முடியாத நல்லெண்ண நடவடிக்கையாக இருக்கிறது என்றும் சர்தாரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


