எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி ரசிகர்களின் ஆரவாரம் இல்லலாமல் இன்று கோவாவில் தொடங்குகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் நடத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின் முதன் முறையாக 7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இந்தியாவிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வழக்கமாக சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்பட 10 நகரங்களில் நடைபெறும். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள ஜவஹர்லால் நேரு, ஜி.எம்.சி அத்லெட்டிக், திலக் ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் இன்று முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஏற்கனவே 10 அணிகள் இடம் பெற்றன. தற்போது புதிதாக ஈஸ்ட் பெங்கால் என்ற அணி இணைந்துள்ளது. அதிகமான கால்பந்து ரசிகர்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இருந்து ஐ.எஸ்.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் 2-வது அணி ஈஸ்ட் பெங்கால் ஆகும்.
ஏற்கனவே பங்கேற்று வரும் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியுடன் பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப் இணைந்து இந்த முறை ஒருங்கிணைந்த அணியாக களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இந்த சீசனில் அணிகள் எண்ணக்கை 11 ஆக அதிகரித்ததை அடுத்து, போட்டி எண்ணிக்கையும் 95லிருந்து 115 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் 3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூர், கோவா, மும்பை, ஜாம்ஷெட்பூர், ஒடிசா, வடகிழக்கு யுனைடெட், ஐதராபாத், கேரளா மற்றும் புதிதாக பங்கேற்றுள்ள ஈஸ்ட் பெங்கால் ஆகிய 11 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. உள்ளூர் அணியான எப்.சி. கோவா, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யுடன் 22–ந் தேதி மோதுகிறது. தற்போது ஜனவரி 11–-ந்தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையின் எப்.சி.
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியுடன் 24–ந் தேதி மோதுகிறது. இந்த போட்டி தொடருக்காக சென்னையின் எப்.சி. அணி கடந்த மாதமே கோவா சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
ஐ.எஸ்.எல் சீசனுக்கான சென்னையின் எப்.சி அணியில், போஸ்னியாவைச் சேர்ந்த எனெஸ் சிபோவிச் இணைந்திருக்கிறார். 6’6″ உயரம் கொண்ட மத்திய கள ஆட்டவீரரான சிபோவிச், ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்னையின் எப்.சி அணியில் இணைந்திருக்கிறார். இதற்கு முன் கத்தாரின் முன்னணி கிளப்பான உம் சலால் எஸ்.சி அணியில் விளையாடி வந்தார்.
இந்த புதிய சீசனில், ரீகன் சிங், சுவாந்தே பனாய் ஆகியோருக்குப் பிறகு சென்னையின் எப்.சி-யில் இணையும் மூன்றாவது வெளிநாட்டு வீரர் ஆவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


