எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தில் ரப்பர் பாம்புதான் பயன்படுத்தப்பட்டது என்று வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ் லுக் போஸ்டரில் சிம்பு கரும்பு காட்டுக்குள் நின்று கொண்டு கையில் ஒரு பாம்பை வைத்திருப்பதுபோல் இருந்தது.
மேலும் சிம்பு ஒரு பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனை தொடர்ந்து சிம்பு பாம்பை துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, அந்த காட்சி எடுக்கப்பட்டது குறித்து, இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரியிடம் நேரில் சென்று விளக்கினார்.
இது குறித்து வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறும் போது, ரப்பர் பாம்பை வைத்து நுணுக்கமாக எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு விளக்கியதாக தெரிவித்தார். இந்த காட்சி குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தத்ரூபமாக எடுத்துள்ள படக்குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


