முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தோல்வி

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாங்காக் : யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 2-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் 23-21, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் புசனனிடம் போராடி தோல்வி அடைந்தார். 

புசனனுக்கு எதிராக சாய்னா தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸி ஜியா லீயை (மலேசியா) எதிர்கொள்ள இருந்த முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களம் இறங்காமலேயே விலகினார். 

அடுத்த வாரம் தொடங்கும் மற்றொரு தாய்லாந்து தொடருக்குள் உடல்தகுதி பெற்று விடுவேன் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்-அஸ்வினி ஆகிய இந்திய ஜோடியினரும் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து