Idhayam Matrimony

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஜாகீர் அமெரிக்கா சென்றார்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஆக.- 2- பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின்  தலைவர் ஜாகீர் உல் இஸ்லாம்  அமெரிக்கா சென்றுள்ளார். இவர் வாஷிங்டனில் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ. யின்  தலைவருடன்  முக்கிய பேச்சு நடத்த இருக்கிறார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில்   அமெரிக்காவுடன்  சேர்ந்து  பாகிஸ்தானும்  செயல்பட்டு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தானில்  தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள்  சரியாக நடக்கவில்லை என்று அமெரிக்கா  குற்றம்சாட்டி வருகிறது.  இதனால் பாகிஸ்தானுக்கு  அளிக்கும் நிதி உதவியை  அமெரிக்கா பாதியாக குறைத்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.யின்  தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜாகீர் உல் இஸ்லாம் நேற்று அமெரிக்கா  சென்றார். இவர் இந்த பதவியை ஏற்ற பிறகு  அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ.யின் தலைவர் டேவிட்  பெட்ராயூசை  ஜாகீர்  சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அடிக்கடி  பாகிஸ்தான் எல்லைக்குள்  ஆளில்லா விமானங்கள் மூலம்  தாக்குதல் நடத்துவதை  அமெரிக்கா  நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம்  ஜாகீர் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் உளவு ஸ்தாபனத்  தலைவர் ஜாகீருடன்  அமெரிக்க சி.ஐ.ஏ. தலைவர்  பேச்சு குறித்து  அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் எந்த தகவலையும்  கூறவில்லை. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும்  அவர் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். பாகிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் அல் குவைதா தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான்  கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  பாகிஸ்தான்  உளவுத்துறையை அமெரிக்க உளவுத்துறை   கேட்டுக்கொண்டுள்ளதாக  கூறப்படுகிறது.  இரு நாடுகளுக்கும் இடையே ஏற்ப்டடுள்ள  உறவு விரிசலை  சரிப்படுத்த வேண்டும்  என்ற நோக்கத்தில்   ஜாகீரின்  பயணம் அமைந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago