எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினியால் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய படையுடன் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜுனமூர்த்தி. பின்னர் உடல்நலனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்த பிறகு அர்ஜுன மூர்த்தி ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்தோடு அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம் என்றும், ரஜினியின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் புதிய கட்சியை அவர் தொடங்க உள்ளார். இதுதொடர்பாக அர்ஜுனமூர்த்தி அளித்த பேட்டியில், 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய படையுடன் புதிய கட்சியை தொடங்க உள்ளேன். என்னுடன் லட்சக்கணக்கான இளைஞர்களும், பல முக்கிய பிரமுகர்களும் உள்ளனர். ரஜினி தொடங்க இருந்த கட்சிக்காக ஓராண்டுக்கு மேல் அமைத்த யூகங்களையும், திட்டங்களையும் புதிய கட்சிக்காக பயன்படுத்தப் போகிறோம். 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். ரஜினிகாந்தை சந்தித்து கட்சி தொடங்கும் விசயத்தை கூறினேன். அதனை ஆர்வமுடன் கேட்ட அவர் சிரித்த முகத்தோடு ஆசிர்வாதம் வழங்கினார். இருப்பினும் ரஜினிகாந்தின் படம், பெயர் ஆகியவைகளை பயன்படுத்த மாட்டோம். தமிழகத்தில் களம் இறங்கி நிச்சயம் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் கைகோர்க்க தயாராக உள்ளனர். இவ்வாறு அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


