Idhayam Matrimony

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு: ராஜ்நாத்சிங் பேச்சு

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 9 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மந்தன் 2021 நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று 384 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 

இதேபோன்று, பாதுகாப்பு உற்பத்தி துறையில் புதியதாக நுழையும் ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு கூடுதலான ஊக்குவிப்பு தேவையென்பதை உணர்ந்து அரசு செயல்படுகிறது. ஏரோ இந்தியா கண்காட்சியில் 45 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது. 

கடந்த 2015-2020 ஆகிய 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது.  நம்முடைய உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி வருகிற 2025-ம் ஆண்டுக்குள், 2,500 கோடி அமெரிக்க டாலராகவும், அவற்றின் ஏற்றுமதி 500 கோடி அமெரிக்க டாலராகவும் இலக்குகளை கொண்டுள்ளது.  இவற்றை நாம் அடைந்து விட்டால், ஏவுகணை, ராணுவ விமானம், வர்த்தக விமானம் உள்ளிட்ட வான்வெளி துறை முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார். 

மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் நம்முடைய பொருளாதாரம் மேம்பாடு அடைய போகிறது.  இந்தியாவின் சுயாட்சி தன்மையை பராமரிப்பதில் பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியில் தற்சார்புடன் திகழ்வது முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து