எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.9 - ஆசிய வளர்ச்சி வங்கி உதவியின் கீழ் ரூ.450 கோடி செலவில் 2 சுற்றுலா திட்டங்கள் அமுல்படுத்த மாநில சுற்றுலா வழிபடுத்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் மாநில அளவிலான வழிப்படுத்தும் குழுவின் முதல் கூட்டம், நேற்று (8.8.2012) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு மாநிலங்களில் (பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு) தமிழகம் மட்டுமே தென் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக, விரிவான பொருளாதார மேம்பாடு, உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் அளித்தல் ஆகியவை இந்த முதலீட்டுத் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை மற்றும் பண்பாட்டு வளங்களை பாதுகாத்திடவும், வளர்த்திடவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணையிட்டு இருந்தார்.
நேற்று 8.8.2012 காலை 11.30 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தலைமையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உள்ளிட்ட இத்திட்டத்தின் மாநில அளவிலான வழிப்படுத்தும் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களான அரசு தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர் மற்றும் இக்குழுவில் உறுப்பினராக உள்ள இதர அரசு துறைச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் அனைவரையும் அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா இத்திட்டம் இரண்டு பெரிய சுற்றுலா சுற்றுக்களை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சுற்று) இச்சுற்று காஞ்சிபுரம், கடலுர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். தென்னக சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று) இச்சுற்று புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி, துத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின்கீழ் , அடிப்படை வசதிகளின் தரம் உயர்த்தப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் ஆசிய வளர்ச்சி வங்கியின் மொத்த ஒதுக்கீடு உத்தேசமாக ரூபாய் 450 கோடியாகும். இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா சுற்றும், அதனைத் தொடர்ந்து தென்னக சுற்றுலா சுற்றும் எடுத்துக்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் மூலம் பின்வரும் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வளரும் சுற்றுலாத் தலங்களில் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற அடிப்படை வசதிகள் மற்றும் இதர சேவைகளை மேம்படுத்துதல், சுற்றுலாத்தலங்களில் மேம்படுத்தப்பட்ட சாலை தொடர்பு வசதிகளை கடைசி இலக்குவரை மேம்படுத்துத்தல், சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்புகளுக்காக சுற்றுலாத் தலங்களில் இயற்கை மற்றும் கலாச்சார சுற்றுலாப் கவர்ச்சிகளை தரம் உயர்த்துதல், சுற்றுலா தொடர்பான பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் உள்ளூர்வாசிகளின் மிகப் பெரிய பங்களிப்பை ஊக்குவித்தல், சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றும் முகமைகளின் திறனை விரிவாக்குதல், திட்ட வளர்ச்சி மற்றும் மேலாண்மையில் சமூக பங்கேற்பு, கவர்ச்சிக்கர சுற்றுலாத் தலங்ககள வர்த்தகப்படுத்துதல் மற்றும் சிறுவியாபாரம் மற்றும் தனியார்துறை பங்கேற்பை மேம்படுத்துதல்.
கீழ்கண்டவைகளுக்கு மாநில அளவிலான வழிப்படுத்தும் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து வசதிகளுடன் சென்னையில் திட்ட மேலாண்மை அலுவலகம் அமைத்தல், நாகப்பட்டினம் மாவட்டம், nullம்புகாரில் திட்ட செயலாக்க அலுவலகம் அமைத்தல்.
இத்திட்டத்திற்காக திட்ட மேலாண்மை ஆலோசகர், வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் ஆகியோரை நியமிப்பதற்கு தமிழக சுற்றுலாத்துறைக்கு இக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை உரிய காலத்திற்குள் விரைவில் செயற்படுத்திட தமிழக சுற்றுலாத்துறைக்கு இக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் இத்திட்டத்தின் முதற்கட்ட பணியினை உடனடியாக துவங்கி வேகமாக செய்திட சுற்றுலாத்துறையை அறிவுறுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



