எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை,ஆக.- 13 - கூடன்குளம் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி இன்னும் பத்து நாட்களில் தொடங்கும் என்று வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்டடுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க ஏதுவாக அதில் எரிபொருள் நிரப்பும் பணிக்கு முந்தைய முறைப்படியான ஆய்வுகள் கடந்த ஜுன் 30ந் தேதி தொடங்கப்பட்டன. இந்த ஆய்வு பணிகள் 2 வாரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து 1வது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 10ந் தேதி அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணியை விரைவில் தொடங்க அதிகாரிகள் குழு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து கூடன்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியதாவது:-
முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருந்தோம். தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதற்கான பணிகளில் தீவிரமாக ்டுபட்டு வருகிறோம். இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் சில நிபந்தனைகளை செயல்படுத்துமாறு கூறியுள்ளது. அதன்படி சில பணிகள் ம்ேறகொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் ஆய்வை மேற்கொள்வார்கள். அதன் பிறகே யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். இன்னும் 10 நாட்களுக்குள் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்படும். இந்த பணி 10 முதல் 15 நாட்களுக்குள் முடிவடையும். பின்பு மின் உற்பத்திக்கான நிலைப்படுத்தப்பட்ட தொடர் வினை பணிகள் 5 கட்டங்களாக நடக்கும். இதன் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். முதல் அணு உலையில் செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


