Idhayam Matrimony

வரும் 13-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஒவைசி பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

மேற்கு வங்காளத்தில் வரும் 13-ம் தேதி ஒவைசி பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை நடத்தி வருகிறார். பீகார் மாநில தேர்தலில் மஜ்லிஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. பல இடங்களில் இந்த கட்சி அதிகளவில் ஓட்டை பிரித்தது.  இதன் காரணமாகத்தான் அங்கு லல்லு கட்சி கூட்டணி ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் மேற்கு வங்காளத்திலும் மஜ்லிஸ் கட்சி தனித்து களம் இறங்குகிறது. மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.  அவர்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்று கருதி இந்த பகுதியில் அதிகளவில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 தொகுதியில் 13 தொகுதியின் வேட்பாளர்களை மஜ்லிஸ் கட்சி இறுதி செய்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அங்கு ஓவைசி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். வரும் 13-ம் தேதி முதல் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். முதலாவதாக சாகர்திகியில் பிரசாரம் செய்யும் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து