முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 13 மார்ச் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கிரைக் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-0 என வென்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே.இ. தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டனான ஜேசன் ஹோல்டர், வங்கதேசத்துக்குச் செல்லவில்லை. இதனால் பிராத்வெயிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் தலைமை தாங்கிய 5 டெஸ்டுகளிலும் மே.இ. தீவுகள் அணி தோற்றிருந்தது. எனினும் அணியை நன்கு வழிநடத்தி டெஸ்ட் தொடரை வென்று காண்பித்தார் பிராத்வெயிட்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கேப்டனாக பிராத்வெயிட் நியமிக்கப்படுவதாக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், மார்ச் 21 முதல் தொடங்குகிறது. 

28 வயது பிராத்வெயிட், 66 டெஸ்டுகளில் விளையாடி 20 சதங்களுடன் 3876 ரன்கள் எடுத்துள்ளார். 29 வயது ஹோல்டர், மே.இ. தீவுகள் அணிக்காக 37 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கி 11 வெற்றிகளையும் 21 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளார். ஒரு டெஸ்ட் வீரராக ஹோல்டர் இன்னும் பல வருடங்கள் பங்களிக்க வேண்டும் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஜிம்மி ஆடம்ஸ் கூறியுள்ளார். 

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஹோல்டர், டேரன் பிராவோ இடம்பெற்றுள்ளார்கள்.

மே.இ. தீவுகள் அணி

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், பொன்னர், டேரன் பிராவோ, ஜான் கேம்பல், ரகீம் கார்ன்வெல், ஜோசுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), ஷனான் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ், கெமர் ரோச், ஜோமெல் வாரிகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து