எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஆக. - 16 - மும்பையில் 1993 ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பாக தீவிரவாதி தாவூத் இப்ராகிம் தனது வீட்டில் வைத்த விருந்து நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். 1993 ம் ஆண்டு மும்பையில் தொடர் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் 277 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவர் மீது துப்பாக்கி வைத்திருந்தது, தாவூத்துடன் தொடர்பு கொண்டிருந்தது என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சஞ்சய் தத். இந்த வழக்கின் விசாரணையின்போது, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முன்பாக தாவூத் இப்ராகிம் சார்பில் சஞ்சய் தத்திடம் ஏ.கே 56 ரக துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல், கிரனேடுகள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர். அதை சில நாட்களில் சஞ்சய் தத் திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் ஒரே ஒரு ஏ.கே 56 ரக துப்பாக்கியை மட்டும் தன்னிடமே வைத்துக் கொண்டார். சஞ்சய் தத்திடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைத்தான் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தாவூத் கும்பலைச் சேர்ந்த தீவிரவாதிகள் பயன்படுத்தினர் என்று சி.பி.ஐ குற்றம் சாட்டியிருந்தது. மேலும் தாவூத்துடன் சஞ்சய் தத்துக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறியிருந்தது. இந்த வழக்கில் 2007ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்ததற்காக சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. பின்னர் அவர் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். ஜாமீனும் கோரினார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் சஞ்சய் தத்துக்கு ஜாமீன் அளித்தது. தற்போது அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாவூத் இப்ராகிமுக்கும், சஞ்சய் தத்துக்கும் இடையிலான நட்பு குறித்து நீதிபதிகள் கேட்டனர். நேற்றைய விசாரணையின்போது சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவரது வக்கீல் ஹரீஷ் சால்வே கூறுகையில், மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பு துபாயில் தாவூத் இப்ராகிம் தனது வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.
இந்த விருந்தில் பாலிவுட் தயாரிப்பாளர்கள் இருவரும் கூட கலந்து கொண்டனர். இதைத் தவிர சஞ்சய் தத்துக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் வேறு எந்த உறவும், தொடர்பும் இல்லை என்றார் சால்வே. சால்வே மேலும் கூறுகையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் மும்பையில் அப்போது பிரபலமான காங்கிரஸ் எம்.பியாக இருந்த சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத்துக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால்தான் பாதுகாப்புக்காக இந்த துப்பாக்கிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை சஞ்சய் தத் குடும்பத்தினர் திருப்பி அனுப்பி விட்டனர் என்று வக்கீல் ஹரீஸ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
விஜயகாந்த் 2-ம் நினைவு நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
தமிழகம் முழுவதும் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்..!
28 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.



